அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே இறுதிகட்ட அனல் பறக்கும் விவாதம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான நேருக்கு நேர் இறுதி விவாதம் டென்னிஸில் உள்ள நாஷ்வில்லே பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேசிய அதிபர் ட்ரம்ப், கொரோனாவிற்கு அவசர மருத்துவ உபகரணங்களை தயாரித்து உலகிற்கே அமெரிக்கா வழங்கியதாகவும், அரசின் தடுப்பு நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ஜோபைடன்,  கொரோனா உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க மாட்டேன் என ட்ரம்ப் கூறுவது சரியா?: என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கொரோனாவை முடக்கச் சொன்னால் நாட்டையே முடக்குகிறீர்கள் என விமர்சித்தார். 

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டது தவறு என விமர்சித்தவர் ஜோ பைடன் என்றும் அதை தவிர அவருக்கு எதைப்பற்றியும் பேசத்தெரியாது என்றும் தெரிவித்தார்.