அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார். இந்திய – அமெரிக்க உறவின் முக்கியத்துவம் குறித்து தாங்கள் உரையாடியதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  இரு நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய பிரச்னைகள்,  கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகவும் பதிவிட்டுள்ளார். 

இதேபோல், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரது வெற்றி, இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய பலமாக விளங்கும் என்றும், கமலா ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.