அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சி வேட்பாளர் JOE BIDEN வெற்றி

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சி வேட்பாளர் JOE BIDEN வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாபதிபதி தேர்தலில் வெற்றி பெற 270 தேர்தல் தொகுதிகளின் வெற்றி தேவைபட்ட நிலையில் pennsylvania மாகாணத்தில் Joe Biden வெற்றி பெறுவார் என்பது உறுதியான நிலையில்,  ஜனநாயக கட்சி வேட்பாளர் JOE BIDEN இந்த தேர்தலில் 273 தேர்தல் தொகுதிகளுடன் வெற்றி பெறுவார் என அறிவிக்கப்பட்டது.மேலும் சில பிரதான  பிராந்தியங்களிலும் தொடர்ந்து Joe Biden முன்னணியில் உள்ளார்.

இதேவேளை தான் இந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக Donalad Trump தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். அத்துடன் இந்த தேர்தல் முறைகேடு தொடர்பாக தான் வழக்கு தாக்கல் செய்து தேர்தல் முறைகேடுகளை நிரூபிப்பேன் எனவும்  மேலும் குறிப்பிட்டுள்ளார். Joe Biden இன்று இரவு நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.