அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே அங்கிருந்து டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இது குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நடமாடியுள்ளார். உடன் உஷாரான பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


சிறிது நேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தார்