அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிராகரிப்பு.

How America turned upside-down -- Meanwhile in America - CNN

ஈரான் மீதான சர்வதேச ஆயுதத் தடையை நீடிப்பது குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்காவுக்கு டொமினிக்கன் குடியரசு மாத்திரமே ஆதரவு தெரிவித்திருப்பதோடு தேவைப்படும் ஒன்பது ஆதரவு வாக்குகளை நெருங்கவும் இல்லை.

இதில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உட்பட 15 அங்குத்துவ நாடுகளில் பதினொரு உறுப்பு நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தன. ரஷ்யா மற்றும் சீனா இதற்கு எதிராக வாக்களித்தன.

ஈரான் மீதான 13 ஆண்டுகள் நீடிக்கும் ஆயுதத் தடை வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி காலாவதியாகவுள்ளது. ஆறு உலக வல்லரசு நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு ஈரான் செய்து கொண்ட அணு சக்தி உடன்படிக்கையின் படியே இந்த காலவதி காலம் நிர்ணயிக்கப்பட்டது.

“உலக அமைதியை மற்றும் பாதுகாப்பை காக்கும் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள பாதுகாப்பு சபை தவறிவிட்டதை மன்னிக்க முடியாது” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

“தன்னிச்சை செயற்பாட்டுக்கு ஆதரவு இல்லை என்பதும் தோல்வி அடையும் என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது” என்று ஐ.நாவுக்கான சீன தூதுவர் சாங் ஜுன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா பொருளாதார தடைகள் அனைத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த தகவலை ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதர் கெல்லி கிராப்ட் தெரிவித்தார்.