அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்காவின் 46 ஆவதி அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத அதிபர் ட்ரம்பும் அவரின் ஆதரவாளர்களும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு ஏற்றார்போல் ஜோபைடன்  வெற்றிபெற்ற முக்கிய மாகாணங்களில் இரண்டு தரப்பினருக்கும் இடையே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன. 


இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் அதிபர் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை விட வெறும் 14,000 வாக்குகள் மட்டுமே பின் தங்கியுள்ளதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அம்மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. குடியரசுக் கடசியின்  கோரிக்கையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜியா மாகாண செயலாளர் தெரிவித்துள்ளார். பெரும்பாண்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போது 290 இடங்களை ஜோ பைடன் வெற்றிபெற்று விட்டதால் ஜார்ஜியா மாகாண மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பைடனுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.