
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அவருடைய மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய், அவரது மகள் ஆராத்தியா பச்சன் ஆகியோர் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, கடந்த 10 தினங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியா பச்சன் ஆகியோர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் அமிதாப் பச்சன் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்தநிலையில், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்த அமிதாப் பச்சன் ட்விட்டர் பதிவில், கொரோனா பாதிப்பு குணமடைந்து அபிஷேக் பச்சன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். நலம் விரும்பிகளின் வேண்டுதல்களுக்கு நன்றி. கடவுள் உயர்ந்தவர் என்று பதிவிட்டுள்ளார்.