அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்

வறட்டு இருமல் சரியாக:

வறட்டு இருமலுக்கு எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் வரட்டு இருமல் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனை சரியாக:

கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி பலம்பெறும்.

தேவையற்ற கொழுப்பு கரைய:

பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

குடல் புண் சரியாக:

அகத்திகீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும் மற்றும் வயிற்றுப் புழுக்கள் அழியும்