அனைவருக்கும் அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் ‘துள்ளி வரும் வேல்’ – முருகன்

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி ரவி, பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் முருகனிடம் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அனைவருக்கும் அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் ‘துள்ளி வரும் வேல்’ என பதிலளித்தார்.

மேலும், பாஜகவினாரால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பா.ஜ.க வினர் சட்டத்தை மீறுபவர்கள் அல்லர் எனவும் அதேசமயம் தங்களுக்கோ, தமிழ் கடவுள்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ ஒரு பிரச்சனை என்றால் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.