எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய சில மருத்துவ குறிப்புக்கள்
=>தேனீ,குளவி கொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும். முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு கடித்த இடத்தில் மண்ணெண்ணெய் தேய்க்கவும்…
=> பூரான் கடிக்கு… பூரான் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்….சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்…
=> பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்…
=> கம்பளிபூச்சிக்கடி…ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு வீக்கம் ஏற்படும்.நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.
அல்லது முருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்க்க குணமாகும்
=> எறும்பு கடிக்கு கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர குணமாகும்
=> சிலந்தி கடித்துவிட்டால்..
தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்.ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்க்க குணமாகும்…
=> தேள் கொட்டியதற்கு மற்றும் பொதுவான விஷ முறிவு
இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.
=> எலிகடித்தால்…. உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும்.
குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.
=> அரணை கடித்தால்..பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட விஷம் முறியும்.
=> குதிரைகடி… அமுக்கிரா கிழங்கு சூரணம் செய்து 2 வேளை சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிடவும்…