அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான செயற்பாடுகளுக்காக விசேட அதிகாரிகள்

அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான செயற்பாடுகளுக்காக விசேட அதிகாரிகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான செயற்பாடுகளுக்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களணி பொலிஸ் பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி MKRA குணரத்னவை 071 859 16 05 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும், கம்பஹா பொலிஸ் பிரிவுகள் தொடர்பில் உதவி பொலிஸ் அதிகாரி துசிதகுமாரவை 071 859 16 10 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு தொடர்பில் பொலிஸ் அதிகாரி பாலித அமரதுங்கவை 071 859 16 32 மற்றும் கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவு தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிரஞ்சன் அபேவர்தன 071 859 15 74 னும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.