அனிருத் பிறந்தநாளுக்கு செம ட்ரீட் கொடுத்த மாஸ்டர் டீம்!

Raghava Lawrence thanks Vijay, Anirudh for their generous gesture! Tamil  Movie, Music Reviews and News

குத்தாட்டம், காதல், காதல் தோல்வி, உள்ளிட்ட அனைத்து வகையான பாடல்களை கொடுத்து படத்தின் ஹீரோவுக்கு நிகராக பேமஸ் ஆன இசையமைப்பாளராக சிறந்து விளங்குகிறார் அனிருத். கடந்த 2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் முதல் படத்தின் “கொலவெறி” பாடலிலேயே கொலவெறி ஹிட் அடித்து பேசப்படும் திறமைசாலியாக மாறினார்.

விஜய்யின் கத்தி தீம் ம்யூஸிக், அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த ஆலுமா டோலுமா, தலைவர் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த மரண மாஸ், சும்மா கிழி அதையடுத்து தற்போது விஜய்யின் மாஸ்டர் பட குட்டி ஸ்டோரி வரை தொட்டதெல்லாம் ஹிட் தான். இந்நிலையில் இன்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடும் அனிருத்துக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது அனிருத்துக்கு பிறந்தநாள் ட்ரீட் ஆக மாஸ்டர் படக்குழு அப்படத்தில் இடம்பெறுள்ள ‘Quit Pannuda’ பாடலின் லிரிக் வீடியோவை இன்று மாலை வெளியிட்டுள்ளனர். இது அனிருத்துக்கு கொடுத்துள்ள சிறப்பான பர்த்டே ட்ரீட் என்பதையும் தாண்டி தளபதி ரசிகர்ளுக்கு வெயிட்டான அப்டேட் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.