அந்தாதூன் ரீமேக்கில் இருந்து விலகினாரா மோகன் ராஜா? பின்னணி இதுதானாம்!

பிரசாந்துடன் இணையும் மோகன் ராஜா || prasanth team up with mohan Raja

நடிகர் பிரசாந்த் நடிக்க மோகன் ராஜா இயக்குவதாக இருந்த அந்தாதூன் படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் தன் தம்பி நடிக்க இருக்கும் படத்தை அவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மோகன் ராஜா இயக்கினால் படத்துக்கு நல்ல ரீச் கிடைக்கும் என நினைத்த தயாரிப்பாளர் தியாகராஜன் இப்போது வேறு ஒரு முன்னணி இயக்குனரை தேடி வருகிறாராம்.