அதிக எண்ணிக்கையிலான புதிய கொரோனா நோயாளிகள் ஸ்கொட்லாந்தில் அடையாளம்

ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 486 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த எண்ணிக்கை கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து பதிவான அதிகபட்ச நாளாந்த எண்ணிக்கையாகும்.

மேலும் புதிய கட்டுப்பாடுகள் ஏன் விதிக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டி முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று உச்சநிலை அடைந்த நேரத்தை விட இப்போது பலர் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

புதிய நோயாளிகளில் 224 பேர் கிரேட்டர் கிளாஸ்கோ மற்றும் கிளைடில் பகுதிகளிலும் லானர்க்ஷையரில் 107 பேரும் லோதியனில் 57 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்டர்ஜன் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்பு காரணமாக ஸ்கொட்லாந்தில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கையினை 25,495 ஆகக் கொண்டுவந்துள்ளது.