அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் வருடத்துக்கு 314 கோடி ரூபாய் வீதம், 5 வருடத்துக்கு 1570 கோடி ரூபாய் நிதியை வருமானமாக ஈட்ட முடியும் என்பதால், IoE என்ற சிறப்பு அந்தஸ்தை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரேவுக்கு, துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதி இருந்தார்.

துணைவேந்தரின் கடிதத்தை பரிசீலித்த மத்திய கல்வி அமைச்சகம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு IoE என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்குவதற்கு மாநில அரசின் ஒப்புதலைக் கோரி, மாநில உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தால் ஈட்டப்படும் வருமணத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை தமிழ் நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கடிதத்துக்கு தமிழக அரசு இதுவரை பதிலளிக்காத நிலையில், தமிழ் நாட்டின் அரசின் ஒப்புதல் கிடைத்த உடன் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு IoE என்ற சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.