அட்லீ – ஷாருக்கான் படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ள தீபிகா

தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தை இயக்கிய வெற்றியை தொடர்ந்து தளபதியை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை தளபதி வைத்து இயக்கிவிட்டார். அடுத்து இவர் யாரை இயக்குவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

அதற்கான பதிலையும் அட்லீ பக்கத்தில் இருந்து வந்துவிட்டது. அதாவது அட்லீ அடுத்து ஷாருக்கானை வைத்து தான் படம் இயக்க இருக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளாராம்.

இதற்கு முன் ஷாருக்கான்-தீபிகா இருவரும் இணைந்து 3 படங்கள் நடித்துள்ளனர்.