அட்டகாசமான டொயோட்டா ஆர்ஏவி-5 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

டொயோட்டா நிறுவனத்தின் ஆர்ஏவி-5 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா ஆர்ஏவி-5 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது! - Tamil DriveSpark

டொயோட்டா நிறுவனத்தின் ஆர்ஏவி-4 சொகுசு எஸ்யூவி கார் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் TNGA என்ற நவீன கட்டமைப்புக் கொள்கையின் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய மாடல் ஐந்தாம் தலைமுறை மாடலாக

டொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி 4,600 மிமீ நீளமும், 1,855 மிமீ அகலமும், 1,6,85 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவி 2,690 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவி மிகவும் விசாலமான உட்புற இடவசதியை பெற்றிருக்கிறது.

மிகவும் தொந்தரவு இல்லாத ஜீப். ரஷ்ய சாலைகளுக்கான மிகவும் நம்பகமான  எஸ்யூவிகளின் மதிப்பீடு

ஐந்தாம் தலைமுறை மாடலாக விற்பனையில் இருக்கும் டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவி தோற்றத்தில் மிகவும் வசீகரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. இந்த எஸ்யூவி ஹைப்ரிட் மாடலாக உள்ளது. இதில், பயன்படுத்தப்பட்டு இருக்கும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹைப்ரிட் மாடலாக இருக்கிறது. அதிகபட்சமாக 218 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை கொண்டது.

இந்த எஸ்யூவியின் எஞ்சின் சக்தி 80 சதவீத டார்க் பின்புற சக்கரங்களுக்கு வழங்கப்படுகிறது. எலெக்ட்ரிக் பூஸ்ட் மூலமாக போதுமான டார்க் திறனை தேவைப்படும் நேரத்தில் பெறுவதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வையும் உறுதி செய்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2020 - Toyota - RAV4 - Vehicles on Display | Chicago Auto Show

புதிய டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவியை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி கூறுகிறது. அதாவது, புதிய இறக்குமதி வரிக் கொள்கையின் கீழ் 2,500 யூனிட்டுகள் வரை எந்த மாற்றங்களும் செய்யாமல் விற்பனை செய்ய முடியும்.

எனவே, இந்த எஸ்யூவி மிக கணிசமாக விலையில் வருவதற்கு வாய்ப்புள்ளது. ரூ.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் ஆர்ஏவி4 எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.