அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் படத்தின் புதிய டிரைலர்!

ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேக் நடிக்கும் கடைசி படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.

பாண்ட் கதாப்பாத்திரத்தில் கேப்டன் மார்வெல் நடிகை | female actor is the new  007

டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்திருந்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படம் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் டிரைலர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்போது இரண்டாவது டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.