அடையாளம் தெரியாத அளவிற்கு அழகாய் மாறிப்போன இந்திரஜா.

பாடி பில்டராக இருந்து பிறகு மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் ரோபோ ஷங்கர் தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் பிரபலமான காமெடியனாக வலம் வருகிறார். பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகள் இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா ரோலில் நடித்து புகழ்பெற்றார். கொரோனா வைரஸ் ஊரடங்கு அனைவரையும் வீட்டில் அமர வைத்துள்ளது. மக்களும் பொழுபோக்கிற்காக தங்களுக்கு பிடித்ததையெல்லாம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ரோபோ சங்கர் மகள் இந்திராஜா ஆரம்பத்திலிருந்தே நடனமாடிய வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மணப்பெண் அலங்காரம் செய்து இணையத்தை ஈர்த்து வருகிறார்.