அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சமாக இருக்கும் – நிபுணர் குழு அதிர்ச்சி தகவல்

நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, ஐசிஎம்ஆர் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.  

அந்த குழு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன் உச்சம் தொட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும், பாதுகாப்பு முறைகள் தொடர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டால், பிப்ரவரி இறுதிக்குள் குறைந்த கொரோனா பாதிப்புகளுடன் தொற்றானது கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முடிவடையும் காலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சமாக இருக்கும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.