அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென உயர் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை

கனடாவின் உயர் சுகாதார அதிகாரிகள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.அத்துடன் இந்த தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் என்பதால் கனடா அத்தியாவசியமானவர்களுக்கு இந்த தடுப்பூசியை விநியோகம் செய்யும் என கூறியுள்ளனர்.அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை முதலில் யார் யாருக்கு உருவாக்க வேண்டிய அவசியம் என்ற கேள்வி எழும் எனவும் கூறியுள்ளனர்.சம்ஷ்டி அரசாங்கம் பல்வேறு தரப்பினர்களுடன் இணைந்து தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு யார் யாருக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானங்களை எடுத்து விநியோகம் செய்யும் என்றும் கூறியுள்ளனர்.தேசிய குழுவினால் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பாக வயது முதிந்தவர்கள் சுகாதாரப்பணியாளர்கள் உயர் ஆபத்துடையவர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் வகையீடு செய்து யார் யாருக்கு முன்னுரிமை அளிக்க பட வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.