அடுத்தடுத்து களமிறங்கும் ரீமேக் கதைகள் – போனி கபூரின் அடுத்த படம் இதுதான்!

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் அடுத்த படம் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது.

அஜித், நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் முன்னணி தயாரிப்பாளருமான போனி கபூரை தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பாளராக தனது நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். அதையடுத்து மீண்டும் வலிமை படத்திற்கும் தயாரிப்பாளராகவே அவரே நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நீண்ட காலமாக வலிமை படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் போனி கபூர் அடுத்து உதயநிதி ஸ்டாலினைக் கதாநாயகனாகக் கொண்டு ஆர்ட்டிகிள் 15படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் தனது அடுத்த தயாரிப்பாக ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ என்ற படத்தின் ரீமேக்கை தயாரிக்க உள்ளாராம். இதற்கான இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.