அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமான ‘கருப்பன்’ பட நாயகி!

IndiaGlitz - Tamil on Twitter: "Tanya Ravichandran 😍😍😍… "

விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ படத்தின் நாயகியாக நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன் என்பது தெரிந்ததே. இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்த படமும் கமிட்டாகவில்லை.

இதனையடுத்து கடந்த சில வாரங்களாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்தார். கருப்பன் படத்தில் கொஞ்சம் குண்டாக இருந்த அவர் தற்போது மெலிந்து ஸ்லிம்மாக காணப்படுகிறார்

இந்த நிலையில் இதன் பயனாக அவருக்கு இரண்டு படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. முதல் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திக்கேயா ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இரண்டாவதாக அவர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கும் தன்யா ரவிச்சந்திரன், மீண்டும் கோலிவுட் பாலிவுட் ஆகியவற்றில் ஒரு சுற்று வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.