அசர்பைஜான் – ஆர்மீனியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது

அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு இடையிலான கடும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

அந்தவகையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பொம்பியோ அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சர்களை சந்திக்கவுள்ளார்.உரிமைப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் கடந்த வாரங்களாக இடம்பெற்றுவரும் மோதலினால் இரு நாடுகள் தரப்பிலும் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டு தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நடத்தி வருகின்றன.இந்த சூழலில் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.