அக்‌ஷய் குமாரின் பெல்பாட்டம் திரைப்படம் செய்துள்ள சாதனை!

அக்‌ஷய் குமார் நடித்துள்ள பெல்பாட்டம் கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் தற்போது பெல் பாட்டம், லக்‌ஷ்மி பாம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ராகவா லாரன்ஸ் இயக்கும் லஷ்மி பாம் படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு பெல்பாட்டம் படத்துக்காக நெதர்லாந்துக்கு படக்குழுவினரோடு சென்றுள்ளார் அக்‌ஷய்குமார்.

அந்த நாட்டு விதிகளின் படி கொரோனா தொற்று அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த, அக்‌ஷய் குமார் ஒரு முடிவை எடுத்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே கலந்துகொள்வேன் என்ற முடிவில் இருந்த அவர் இப்போது 14 மணிநேரம் வரை நடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளாராம். மேலும் படக்குழுவை இரண்டாக பிரித்து ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளது படக்குழு. கொரோனாவுக்குப் பின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்த முதல் படம் என்ற சாதனையை பெல்பாட்டம் நிகழ்த்தியுள்ளது.