அக்‌ஷய் குமாரின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் அக்‌ஷய் நடிப்பில் உருவாக உள்ள ராம் சேது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் காஞ்சனா. இதை இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்த நிலையில் அதில் கதாநாயகனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியான நிலையில் லக்‌ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் படத்தலைப்பில் பாம் என்ற சொல்லை எடுத்துவிட்டு லக்‌ஷ்மி என பெயர் வைக்கப்பட்டது. இந்த படம் தீபாவளி வெளியீடாக வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று அக்‌ஷய் குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது அடுத்த படமான ராம் சேது படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் ’எதிர்கால தலைமுறையினர் இடையே இணைப்பை ஏற்படுத்தக் கூடிய பாலத்தை கட்டமைப்பதின் மூலம் ராமரின் கொள்கைகளை உயிரோடு வைத்திருக்க முயற்சி செய்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.