அக்வா மேன் படத்தில் இருந்து விலகுகிறாரா ஜானி டெப்பின் மனைவி !

Johnny Depp libel case against a British newspaper has begun - Insider

பிரபல நடிகர் ஜானி டெப் தனது மனைவி ஆம்பர் ஹேர்டை அடித்து துன்புறுத்துவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பிரபல நடிகரான ஜானி டெப் தனது மனைவியான ஆம்பர் ஹேர்டை அடித்துத் துன்புறுத்தியதாக லண்டனில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக ஜானி டெப் தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இதனால் ஜானி டெப் தான் நடிக்கும் பெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்தில் விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜானி டெப்பின் மனைவியான ஆம்பர் ஹேர்ட் தான் நடிக்கும் அக்வா மேன் 2 படத்தில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஆம்பர் ஹேர்ட் மறுத்துள்ளார். அடுத்த ஆண்டு அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.