அக்டோபர் மாதத்தில் டொரோண்டோ பிராந்திய பாடசாலைகளில்(TDSB) இணையத்தின் மூலம் கல்வி பயிலும் மாணவர்கள் தொகை அதிகரிக்கும்

டொரோண்டோ பிராந்திய  பாடசாலைகளில்(TDSB) இணையத்தின் மூலம் கல்வி பயில இந்த மாத இறுதிக்குள் மேலும் 4500  மாணவர்கள் இணைவார்கள் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது இதனால்  இந்த மாத இறுதியில் டொராண்டோ வகுப்பறைகளில் இன்னும் குறைவான மாணவர்கள் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

டொரொன்டோ மாவட்ட பாடசாலைகள்  வாரியம் கூறுகையில், ஆயிரக்கணக்கான ஆரம்ப நிலை பாடசாலை மாணவர்கள், இணைய நேரடி கல்வி முறைக்கும், வகுப்பறை கற்றலுக்கும் இடையில் விரைவாக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டனர்

அக்டோபர் 13, ம் திகதியன்று  7,500 ஆரம்ப நிலை  மாணவர்கள் வகுப்பிலிருந்து இணைய நேரடி கல்வி கற்றலுக்கு மாறுவார்கள் என்று மாகாணத்தின் மிகப்பெரிய பாடசாலைகள் வாரியம் கூறுகிறது.

அதே நேரத்தில், வீட்டிலிருந்து கற்றுக் கொண்டிருந்த 3,000 மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்வார்கள் என்றும், டொரோண்டோ மாவட்ட பாடசாலைகள்  வாரியத்தின் தரவுகளின் படி 174,000 ஆரம்பநிலை மாணவர்களில் 58,500 மாணவர்கள்  வீட்டில் இருந்து கல்வி  பயில்வதாகவும்,73,000 உயர்நிலை மாணவர்களில் 18,000 பேர்  வீட்டில் இருந்து கல்வி பயில்வதாகவும், அவர்கள் வரும் நவம்பர் 23 திகதி இரண்டாவது தவணை தொடங்கும் வரை வகுப்பறை மூலம் கல்வி பயில செல்ல முடியாது என்றும் மாணவர்கள் தங்கள் முடிவை அக்டோபர் 15 திகதிக்குள் எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது