அகில இலங்கை ரீதியாக வலைப்பந்தாட்ட தமிழ் மொழி நடுவர்களுக்கான செய்முறை பரீட்சை

அகில இலங்கை ரீதியாக உள்ள அனைத்து தமிழ்மொழி  வலைப்பந்தாட்ட  நடுவர்களுக்கான செய்முறை பரீட்சை இன்று இடம்பெற்றது.


வடமாகாண வலைப்பந்தாட்ட இணைப்பாளர் T.M தெய்வேந்திரன் அவர்களின் தலைமையில் இவ் செய்முறைப்பரீட்சை இடம்பெற்றது.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இவ் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 130 தமிழ்மொழி நடுவர்கள் கலந்துகொண்டனர்.
அண்மையில் இடம்பெற்ற எழுத்துப் பரீட்சையில் சித்திபெற்ற நடுவர்களுக்கு மாத்திரமே இவ் செய்முறைப் பரீட்சை இடம்பெற்றது.
இதன்போது தேசிய வலைப்பந்தாட்ட அங்கத்துவர்கள் மற்றும் தேசிய ரீதியிலான நடுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.